Wednesday, March 23, 2011

அமெரிக்கர்களையே ஆட்டிப்படைக்கும் பிரெஞ்ச் சிறுவன்






விக்கிலீக்ஸ் தளத்திற்கு உதவி செய்யும் முகமாக அமெரிக்க இணையத்தளங்கள் சிலவற்றில் ஊடுருவல் செய்த குற்றத்திற்காக 15 வயது பிரெஞ்ச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
எந்தவிதமான குற்றச் செயல் பதிவுகளுமில்லாத இந்தச் சிறுவன் மாஸ்டர்கார்டு, வீசா, பேபால் போன்ற அமெரிக்க பணமாற்று தளங்களின் தரவுகளைத் திருடியுள்ளான்.
சமூக இணையத்தளங்களில் ஒரு குழுவாக இயங்கும் இவர்கள் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பாதுகாப்பதாகக் கூறி இத்தகைய பெருந்தளங்களுக்குள் ஊடுருவுகின்றனர். இப்படியான இலத்திரனியல் தகவற் திருட்டு பாரிய குற்றமாகக் கருதப்படுகின்றது. இதற்கு அடிப்படையில் 5 ஆண்டுகள் சிறையும் 75,000 யூரோக்கள் அபராதமாகவும் விதிக்கப்படும்.

ஆனால் ஒரு வயது குறைந்த சிறுவன், முன்பு எந்தவிதமான குற்றச் செயல்களும் புரியாத ஒரு சிறுவனைத் தண்டிப்பதற்குப் பொருத்தமான சட்டப்பிரிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை என அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார். ஆவணப் பாதுகாப்பு மற்றும் இலத்திரனியல் குற்றத்தடுப்புப் பிரிவினர் இப்படியான செயல்கள் குறித்து மேலும் கவனமெடுக்கப் போவதாகக் கூறியுள்ளது.

இவர்கள் தமது அதியுச்ச கணினியியல் அறிவைப் பயன்படுத்தி பல நூற்றுக்கணக்கான கணினிகளை வலைய அமைப்பில் இணைத்து ஒரே நேரத்தில் பல லட்சம் தகவல் கேள்விகளை ஒரு தளத்திற்கு அனுப்பி அதன் தகவல் மையத்தைத் தாக்கி அந்தத் தளத்தை முடக்கி வைக்கவும், தகவல் வங்கியிலுள்ள கோப்புகளை அழிக்க அல்லது தரவிறக்கம் செய்யவும் இவர்களால் முடிகின்றது.

ஆனாலும் அந்தச் சிறுவனின் வழக்கில் இவன் பல அமரிக்கத் தளங்களில் ஊடுருவியிருப்பினும் இது எந்தக் குற்றவியல் நோக்கங்களுக்காகவும் செய்யப்படவில்லை எனவும், இவன் தன்னால் என்ன முடியும் என்ற ஆர்வத்தில் மட்டுமே இதைச் செய்துள்ளான் எனவும் விக்கிலீக்ஸ் இணையத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் விக்கிலீக்ஸிற்கு உதவமறுத்த மாஸ்டர்கார்டு, வீசா, பேபால் போன்ற அமெரிக்க பணமாற்று தளங்களின் மீதே இவன் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அரச தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.